அஜித் திடீரென காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா?
அஜித் திடீரென காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு என்ன தான் காரணம் என்ற ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், அஜித் அவரது வீட்டிலிருந்து ரைபிள் கிளப் செல்வதற்காக கால் டாக்ஸியில் வந்துள்ளார். கால் டாக்சியில் உள்ள கூகுள் மேப் தவறான இடத்தை காட்டியதால் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் அஜித் உண்மையில் எழும்பூரில் உள்ள பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ரைபிள் கிளப்பிற்கு செல்லவிருந்தார். கூகுள் மேப்பை பார்த்து கால்டாக்சி டிரைவர் புதிய காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அஜித்தை அழைத்து வந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் அஜித்திடம் இடமாறி வந்து இருப்பதாக காவல்துறையினர் அவரிடம் தெரிவித்ததோடு ரைபிள் கிளப் பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே உள்ளது என்று வழிகாட்டினர். இதனையடுத்து தனக்கு சரியாக வழிகாட்டிய போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் அஜித் உடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.