கீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் 'கதாநாயகன்' அறிவிப்பு!
கீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் 'கதாநாயகன்' அறிவிப்பு!;
தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பிரபல மலையாள பட தயாரிப்பாளர் மலையாள சினிமாவில் ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் 20 படங்களுக்கு மேல் தயாரித்தவர். மேலும் இவர் தயாரித்த 'குபேரன்' என்ற மலையாள படத்தில் தான் நடிகையாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே பல வருடங்களுக்கு பிறகு சுரேஷ்குமார் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. 'வாஷி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 'டோவினோ தாமஸ்' நாயகனாகவும், 'கீர்த்தி சுரேஷ்' நாயகியாகவும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தமிழ் சினிமாவில் மாரி-2 என்ற படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதும், மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார்.வாஷி படத்தை கைலாஷ் மேனன் என்பவர் இசையமைக்க உள்ளதாகவும், விஷ்ணு ஜி.ராகவ் என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
#Vaashi: #TovinoThomas And #KeerthySuresh To Star In A Malayalam Film To Be Produced By The Actress’ Father, Producer #GSureshKumar (View Poster)#VaashiTheMovie @ttovino @KeerthyOfficial @vishnugraghav #RevathyKalaamandhir @TFWAI_OFFICIAL @KSTrendsPage https://t.co/C6EB9sNkwx
— LatestLY (@latestly) January 25, 2021