இந்தி நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கோவிந்தா ‘‘உடல் நிலையில் சில மாற்றம் இருந்ததால் தானாகவே முன் வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டேன்.
பிரபல இந்தி நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தொற்று பரவியதை போன்று மீண்டும் பரவத் தொடங்கியதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கோவிந்தா ''உடல் நிலையில் சில மாற்றம் இருந்ததால் தானாகவே முன் வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ உதவிகளுடன், நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.