இந்திய மிகவும் நல்ல மொழி என்பதால் அதனை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு நகை கடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தற்காலத்தில் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் சிறந்தது ஆகும். மேலும், மலையாள மொழி படங்களை இன்று இந்தியா முழுவதும் மக்கள் பார்த்து வருகின்றனர். அதே சமயம் துல்கர் சல்மன், பகத் பாசில் உள்ளிட்ட மலையாள மொழி நடிகர்களையும் இந்திய மக்கள் பலருக்கும் தெரியும்.
தென்னிந்திய படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. மேலும், தென்னிந்திய மற்றும் வடஇந்திய சினிமா இடையில் தற்போது மொழி சண்டை ஏற்படுவது பற்றி கேட்டபோது, நடிகர்களை பொறுத்தவரையில் அனைத்து மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் அனைத்து மொழிகளையும் மதித்து நடக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். இந்தியும் நல்ல மொழி, அதனை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்களும், தமிழ் பேசுபவர்களும் நல்லவர்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai