இந்து அமைப்புகளின் எச்சரிக்கை.. ஜகா வாங்கிய 'ஜகா' இயக்குனர்.!
இந்துமத கடவுளை அவமதிக்கும் விதமாக போஸ்டர் வெளியிட்ட ஜகா திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இயக்குனர் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்துமத கடவுளை அவமதிக்கும் விதமாக போஸ்டர் வெளியிட்ட ஜகா திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இயக்குனர் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓம் டாக்கீஸ் என்ற நிறுவனம் தற்போது ஜகா என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் நேற்று இணையதளத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் இந்து மத கடவுளான சிவபெருமான் முகக் கவசம் அணிந்து, ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து சுவாசிப்பது போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் "சானிடைசரில் ஆல்கஹால் இருக்கின்றது. அதனால் அதனை குடிக்கின்றேன்" என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருப்பதால் இந்த காட்சியின் மூலம் பலரது உயிர் பறிபோகும் நிலை ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பலர் இந்த படத்துக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தற்போது இந்து மதக் கடவுளை அவமதித்தால் படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அதனால் படத்திற்கு மலிவான விளம்பரம் கிடைத்துவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் பலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடவுள்களையும் மத நம்பிக்கைகளையும் அவமதித்து இவ்வாறு படம் எடுப்பதை கண்காணிக்கும் விதமாக மத்திய அரசு சினிமா வரையறை திருத்தச் சட்டத்தை கொண்டு வர இருந்தது. இதற்கு இது போன்ற சினிமாக்காரர்கள் எதிர்ப்பது இது தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த திரைப்பட குழுவினர் மீது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த படத்தின் போஸ்டரை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் "கடவுள் முக கவசம் அணிவது போன்ற காட்சியை எடுத்தால் அது பொதுமக்களிடம் எளிதாக சென்று சேரும்" என்ற எண்ணத்திலேயே அவ்வாறு போஸ்டர் வெளியிட்டதாகவும் "இந்து மதக் கடவுளை அவமதிக்கும் விதமாக தாங்கள் போஸ்டரை வெளியிடவில்லை" என்றும் இதனால் "பலருக்கு மன வருத்தம் ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது மன்னிப்பு கடிதத்தில் படத்தின் இயக்குனர் விஜய முருகன் குறிப்பிட்டுள்ளார்.