'ஒளிப்பதிவு வேறு, இயக்கம் வேறு என புரிந்துகொண்டேன்' - பி.சி.ஸ்ரீ ராம் ஏன் அப்படி கூறினார்

'இயக்குனர் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டேன்' என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீ ராம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-23 09:04 GMT

'இயக்குனர் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டேன்' என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீ ராம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வரும் பி.சி.ஸ்ரீ ராம் 'மௌன ராகம்', 'நாயகன்', 'தேவர் மகன்', 'அலைபாயுதே' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை ஒளிப்பதிவு செய்தார். தற்பொழுதும் இந்தியாவில் மிகப் பிரபலமான ஒளிப்பதிவாளர்களில் இவர் முதன்மையானவர்.

இந்நிலையில் இவர் இயக்கிய படங்களாகிய மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் ஆகிய மூன்று படங்களும் தொழில்நுட்ப ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இது குறித்து சமீபத்தை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும் படங்கள் நான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை ஒளிப்பதிவு வேறு, திரைப்படத்தை இயக்குவது வேறு என்பதை புரிந்து கொண்டதால் இனி திரைப்படத்தை இயக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன்' என பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

Similar News