ஜெய்பீம் விவகாரம்: வன்னியர்களிடம் வருத்தம் மட்டுமே பதிவு செய்த இயக்குனர் ஞானவேல்!

சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியானது. படம் வெளியான நாட்களில் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. அதாவது வன்னியர்களை மிக கொடுரமானவர்களாக இயக்குநர் ஞானவேல் காட்டியுள்ளார்.

Update: 2021-11-21 12:40 GMT

சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியானது. படம் வெளியான நாட்களில் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. அதாவது வன்னியர்களை மிக கொடுரமானவர்களாக இயக்குநர் ஞானவேல் காட்டியுள்ளார்.

வன்னியர்கள் புனிதமாக கருதப்படும் அக்னிசட்டி பொருத்தப்பட்ட காலண்டரை இருளர் சமுதாயத்தை கொலை செய்த காவலர் ஆய்வாளர் வீட்டில் மாட்டப்பட்டிருந்தது. இந்த காலண்டர் தற்செயலாக மாட்டப்படவில்லை எனவும், வன்னியர்களை தவறாக காண்பிக்கவே மாட்டியதாக வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் குற்றம்சாட்டினர். இதற்காக தமிழகம் முழுவதும் சூர்யாவின் உருவப்படத்தை கொளுத்தி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

மேலும், நடிகர் சூர்யா மற்றும் படக்குழு அனைவரும் உடனடியாக வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வெளிப்படையாக பாமகவினர் கேட்டுக்கொண்டனர். ஆனால் சூர்யா வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதனால் மீண்டும் கோபமடைந்த வன்னியர்கள் சூர்யாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தனர். இதனால் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. சூர்யாவை பொறுப்பு ஏற்க சொல்வது துர்தஷ்டவசமானது. பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமே சூர்யாவின் நோக்கமாகும்.

மேலும், சில வினாடிகள் மட்டுமே படத்தில் இருந்த காலண்டர் எங்களின் கவனத்தில் பதியவில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அந்த காலண்டரை காட்டுவது என்பது எங்களின் நோக்கமல்ல. இயக்குநராக நான் மட்டுமே பொறுபேற்க வேண்டிய விஷயம் இது. இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் எங்கேயும் வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட வில்லை. இதனால் மீண்டும் வன்னியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக பாமகவினர் சமூக வலைதளங்களில் தங்களின் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:Daily Thanthi

Image Courtesy: Open Magazine


Tags:    

Similar News