ரஜினியை முழு நீள காமெடி படத்தில் ஆசைப்படும் பிரித்விராஜ்

'சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை முழு நீள காமெடி திரைப்படத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன்' என பிரித்விராஜ் கூறியுள்ளார்.

Update: 2022-07-01 07:27 GMT

'சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை முழு நீள காமெடி திரைப்படத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன்' என பிரித்விராஜ் கூறியுள்ளார்.



மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்க 'கடுவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 7'ம் தேதி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகிறது இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் ப்ரிதிவிராஜ்.




அப்போது பேசி அவர் கூறியதாவது, 'கமல் சாரின் காமெடி சீன்ஸ் பற்றி நமக்கு தெரியும் 'பஞ்சதந்திரம்' போன்ற படங்களில் பார்த்திருப்போம். ஆனால் ரஜினி சார் என் காமெடி சீன்ஸ் குறித்து அவ்வளவாக யாரும் பேசியதில்லை ரஜினி சாருக்கு சிறந்த நகைச்சுவை தன்மை உள்ளது அவரை குடும்ப நகைச்சுவை படங்களை பார்க்க நான் ஆசைப்படுகிறேன்' என கூறினார்.

Similar News