கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Update: 2021-01-26 18:10 GMT

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கினார். மேலும் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே பாராட்டியதோடு எனக்கு ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார் என்ற அலைபேசி பதிவுகளும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் உள்ள நடிகைக்கு திருமணம் நடக்கப்போவதாகவும், அவர்  முக்கிய வேடத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியன் ஆவார். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள். அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகி நிரஞ்சனி அகத்தியன், இப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்யப்போவதாகவும், இவர்களது திருமண பத்திரிகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து இயக்குநருக்கும்,நாயகிக்கும் திரையுலகினர்,ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைப்பற்றி இவரின் அக்காவான நடிகை விஜயலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News