"மாஸ்டர்" திரைப்படத்தை தயாரிப்பாளர் ஓடிடியில் வெளியிட முடிவு - தமிழக அரசு பேச்சுவார்த்தை.!
"மாஸ்டர்" திரைப்படத்தை தயாரிப்பாளர் ஓடிடியில் வெளியிட முடிவு - தமிழக அரசு பேச்சுவார்த்தை.!;
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும், திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் பலமுறை இந்த படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் ஜனவரி 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் ‘மாஸ்டர்’ படம் ஓடிடியில் தான் ரிலீஸாகும் என்று ஒரு சில வதந்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு அவர்கள் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரிப்பாளர் ஓடிடியில் வெளியிட முடிவு செய்தால் திரையரங்கில் வெளியிட வலியுறுத்தி தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார். இதனால் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.