வெங்கட் பிரபு படத்திற்காக இணைத்து இசையமைக்கவிருக்கும் இளையராஜா, யுவன்
மீண்டும் இணைந்து இசையமைக்க வருகிறார்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும்.
மீண்டும் இணைந்து இசையமைக்க வருகிறார்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும்.
இளையராஜாவும் அவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசையமைத்தனர் சீனு ராமசாமி இயக்கிய இப்படம் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோர் இசையமைக்க இருக்கிறார்கள். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.