பிரசாத் ஸ்டுடியோவிற்கு உருக்கமான கோரிக்கை விடுத்த இளையராஜா.!

பிரசாத் ஸ்டுடியோவிற்கு உருக்கமான கோரிக்கை விடுத்த இளையராஜா.!

Update: 2020-12-18 15:44 GMT

இளையராஜா ஒருநாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா? பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான எல்.வி.பிரசாத்தின் அனுமதியுடன் இளையராஜா அங்கு தனது இசை பணியை தொடங்கி வந்தார். இளையராஜா இதற்கு முறையாக வாடகை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இளையராஜாவை ஸ்டூடியோவை விட்டு வெளியேறுமாறு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் கூறியிருந்தார். இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ இடையேயான விவகாரத்தைச் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டது.

இதனையடுத்து பிரசாத் ஸ்டூடியோ ரூ.50 லட்சம் இழப்பீடு தர கோரி இசையமைப்பாளர் இளையராஜா மனுதாக்கல் செய்திருந்தார். அத்துடன் பிரசாத் ஸ்டுடியோவில் 1976 முதல் இசை அமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தேன். அங்கு ஒருநாள் தியானம் செய்துவிட்டு பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜாவின் இந்த கோரிக்கை திரையுலகில் இருப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இசை உலகில் ஜாம்பவனாக இருக்கும் ஒருவருக்கா இந்த நிலைமை என்று பேசி கொள்கின்றனர்.
 

Similar News