தனுஷின் 'கர்ணன்' படம் குறித்து தயாரிப்பாளர் அறிவித்த முக்கிய அறிவிப்பு..!

தனுஷின் 'கர்ணன்' படம் குறித்து தயாரிப்பாளர் அறிவித்த முக்கிய அறிவிப்பு..!;

Update: 2021-02-18 16:18 GMT

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள படம் கர்ணன். இப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்துள்ளார்.

அந்த வகையில் இப்படத்தின் சிங்கிள் பாடலான 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு, தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த பாடலை பார்க்க ரசிகர்கள் இச்செய்தியை ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய துணை கதாபாத்திரங்களாக  நடிகை லட்சுமி, பிரியா யோகிபாபு மற்றும் மலையாள நடிகர் யால் ஆகியோர் நடித்துள்ளனர். 

Similar News