தனுஷ் - மாளவிகா மோகன் இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு.!

தனுஷ் - மாளவிகா மோகன் இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு.!

Update: 2020-11-30 17:57 GMT

தமிழில் முன்னணி நடிகராக  வலம்வரும் தனுஷின் அடுத்த படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு தெரிய வந்துள்ளது. இவர் தற்போது ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்த படத்தை பற்றிய முக்கிய அறிவிப்புகளும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் இவருடன் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக D43 படம்  பற்றி முக்கிய அறிவிப்புகள் தெரியவந்துள்ளன. மேலும் இந்த படத்திற்கு டிசம்பர் இறுதியல் பூஜை நடக்க உள்ளதாகவும்,அடுத்த வருடம் ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சினிமா  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகன்  நடிக்க இருப்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.  இப்படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்புகள் சில நாட்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

Similar News