சமுத்திரக்கனி நடித்த 'ஏலே' திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய அறிவிப்பு!
சமுத்திரக்கனி நடித்த 'ஏலே' திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய அறிவிப்பு!;
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஹலிதா சமீம் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது: என்னுடைய ஏலே திரைப்படம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சென்றடையவுள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி. இயக்குநராக எனது பயணம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே “ஏலே” என் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருந்தது. தற்போது மிகப்பெரும் வெளீயீடாக பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை ஒரே நாளில் என் படம் சென்றடைவதை, காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதிய தளத்தை மிகப்பெரும் எண்ணிக்கையிலான ரசிகர் கூட்டத்திடம் உலகம் முழுதும் இத்திரைப்படத்தை வெளியிடும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்.
வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் & காயத்திரி கூறியது: ஒரு நல்ல சினிமா, அதன் பார்வையாளர்களை ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக சென்றடையும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்படம் எங்களது வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் உருவாகும் முதல் படைப்பு மேலும் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. மனதிற்கு இதமான இத்திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் எளிதில் கவரும் என்று அறிவித்து உள்ளனர்.