தனுஷின் 'D43' படத்தின் முக்கிய அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

தனுஷின் 'D43' படத்தின் முக்கிய அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்!;

Update: 2021-01-12 17:13 GMT

தென்னிந்திய சினிமாவில்  முன்னணி கதாநாயகர் ஆகவும், தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகர் தனுஷ். அந்தவகையில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் தற்போது  நடித்து முடித்த ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தனுஷின் 43-வது படமான 'D43' படத்தின் படப்பிடிப்பு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. 

முதல்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக இந்த படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஜானி அவரது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

மேலும் ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் ஸ்டைலிஷாகவும் மாஸ் ஆகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்றும் சூப்பர் டான்ஸ் மற்றும் சூப்பர் மாஸ் பாடலுக்காக காத்திருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News