நடிகை டாப்ஸி உட்பட பல நடிகர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை.!
மும்பையில் வசிக்கின்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் வீடுகளில் வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்திய சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் வசிக்கின்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் வீடுகளில் வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்திய சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரை நட்சத்திரங்களான அனுராக் காஷ்யப், விகாஸ் பஹ்ல், நடிகை டாப்ஸி உட்பட பல்வேறு நடிகர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், மும்பை, புனே மற்றும் பாண்டம் பிலிம்ஸ் வளாகம் உட்பட பல இடங்களில் 22 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த திடீர் சோதனையால் திரைத்துறை அதிர்ச்சியில் உள்ளது. இதில் கணக்கில் வராத பணம் பல கோடி சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.