விரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு - எப்போது தெரியுமா?

செப்டம்பர் மாதம் மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

Update: 2022-07-28 08:27 GMT

செப்டம்பர் மாதம் மீண்டும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.




 


கமலஹாசன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 'இந்தியன் 2' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்தார். கொரோனா ஊரடங்கு மற்றும் சில தடங்கல்கள் காரணமாக இந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக இயக்குனர் சங்கர் சென்று விட்டார்.




 


இந்த சூழலில் தற்பொழுது ராம்சரண் இயக்கும் திரைப்படத்தை விரைவில் ஷங்கர் முடித்து விடுவார் எனவும் அடுத்தபடியாக 'இந்தியன் 2' படத்தை இயக்க விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் எனவும் தகவல்கள் வெளி வருகின்றன.

Similar News