வலிமை படம் குறித்து போனிகபூர் வெளியிட்ட தகவல்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

வலிமை படம் குறித்து போனிகபூர் வெளியிட்ட தகவல்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Update: 2021-02-11 18:24 GMT

தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. பல நாட்களாக ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், வலிமை படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. ஆனால் அஜித் ரசிகர்கள் இப்படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் மற்றும்  தயாரிப்பாளர் போனிகபூரிடமும் படம் ரிலீஸ் தேதி, ட்ரெய்லர் குறித்து அப்டேட் கேட்டும் பதிலளிக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் உலகில் பிரபலமான ஊடகமான 'போர்ப்ஸ்' என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள போனிகபூர், வலிமை படம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.  அதன்படி வலிமை படத்தின் உள்நாட்டு படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் இன்னும் ஒரே ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டுமே வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் உறுதி செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வலிமை அப்டேட் குறித்து போனிகபூர் கூறியுள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சமூக ஊடகங்களில் வைரல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News