ஷங்கர் இயக்கும் RC 15 தலைப்பை பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்

ஷங்கர் இயக்கும் ராம்சரன் படத்தின் தலைப்பு என்ன என ரசர்களிடம் எதிர்பார்த்த நிலையில் அதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2022-05-28 01:00 GMT

ஷங்கர் இயக்கும் ராம்சரன் படத்தின் தலைப்பு என்ன என ரசர்களிடம் எதிர்பார்த்த நிலையில் அதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்தியாவின் பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியா படமாக ராம்சரண் ஹீரோவாக நடிக்க படம் ஒன்றை இயக்கி வருகிறார். ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.




இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வந்த சூழலில் படத்தில் ராம்சரண் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும் இப்படத்திற்கு தலைப்பு 'அதிகாரி' என இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Similar News