நயன்தாரா தயாரித்த முதல் படத்திற்கே சர்வதேச விருது! குவியும் வாழ்த்துக்கள்!

நயன்தாரா தயாரித்த முதல் படத்திற்கே சர்வதேச விருது! குவியும் வாழ்த்துக்கள்!

Update: 2021-02-08 16:32 GMT

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா.  இவர் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்த 'கூழாங்கல்' என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சர்வதேச டைகர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது என்பதும், இந்த விருது நடக்கும் நிகழ்ச்சிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கலந்து கொண்ட புகைப்படமும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


 

மேலும் இந்த விருதை பெறும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான். அதுமட்டுமின்றி நயன்தாரா தயாரிப்பில் உருவான முதல் திரைப்படத்திற்கே சர்வதேச விருது கிடைத்துள்ளது என்பதும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த தகவலை விக்னேஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களும்,  திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News