சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்திற்கு கிராபிக்ஸ் செய்ய இவ்வளவு மாதமா.?
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்திற்கு கிராபிக்ஸ் செய்ய இவ்வளவு மாதமா.?
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘அயலான்’ படத்தை வருகின்ற கிறிஸ்துமஸ் அன்று வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ரவிகுமார், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே தொடங்கினர். ஆனால் நிதி மற்றும் கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ‘அயலான்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த படத்தில் இடம்பெறுகின்ற கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கு பணி நடைபெற உள்ளது.
இந்த பணிகள் முடிவடைய குறைந்த 10 மாதங்கள் தேவைப்படும் என்பதால், அயலான் படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.