ரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன் - அவரே வெளியிட்ட தகவல்.!
ரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன் - அவரே வெளியிட்ட தகவல்.!;
தமிழ் சினிமாவில் பிரபல பாடகரும், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சமீபத்தில் ரஜினியுடன் இணைந்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார். இதனை அடுத்து அவர் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் சேர இருப்பதாக சமூகவலைதள நபர்கள் தெரிவித்தனர்.இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிக்பாஸ் வேல்முருகன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அவர்களை சந்திப்பதற்காக அனுமதி பெற்று இருந்தேன். அப்போது நான் என் மனைவி குழந்தைகளுடன் சென்று அவரை சந்தித்தேன்.
நான் அவருக்கு பல்வேறு விதமான பாடல்களைப் பாடிக்காட்டி கொண்டிருந்தபோது என்னுடைய தாய் குறித்து ஒரு பாடலை பாடினேன். அப்போது அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் என் அருகே வந்து எனக்கு பாராட்டு தெரிவித்து, அருகில் இருந்த உதவியாளரை அழைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அந்த புகைப்படம் நான் எடுக்கவில்லை. அந்த புகைப்படத்தை பின்னர் ரஜினியின் உதவியாளர் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.
இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து உள்ளார் என்ற தகவல் தெரிந்தவுடன் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அந்த புகைப்படத்தை நான் பதிவு செய்தேன். மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் அந்த பதிவில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.இதனை அடுத்து ரஜினி கட்சியில் தான் சேரவில்லை என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.