ரஜினி, கமல் பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனா?

ரஜினி, கமல் பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனா?;

Update: 2021-01-27 07:00 GMT

கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய் என முன்னணி நடிகர்கள் படங்களை தயாரித்த லைகா நிறுவனம் அடுத்ததாக தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  ஏற்கனவே கமலஹாசன் 'இந்தியன் 2', ரஜினிகாந்த் 'தர்பார்',விஜய் 'துப்பாக்கி'  உள்பட படங்களும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது இந்நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்டமான திரைப்படம்  உருவாகி வருகிறது. அந்த வகையில் லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை "காலை 11" மணிக்கு வெளியாகும் என்றும் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

இந்தப் பதிவின் காரணமாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள்  உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இது சிவகார்த்திகேயனின் 19-வது படமாகும். இப்படத்தை பற்றிய முக்கியமான தகவலை நாளை 11 மணி அளவில்  பார்ப்போம்.

Similar News