'சூரியவம்சம் 2' உருவாவது நிஜமா?

சூரியவம்சம்- 2 திரைப்படம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-05-24 13:45 GMT

கடந்த 1997 ஜூன் 27 - ஆம் தேதி வெளியாகிய வெற்றி பெற்ற படம் சூரிய வம்சம் விக்ரமன் இயக்கினார். இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்தார். ராதிகா, தேவயானி, பிரியா ராமன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆனந்தராஜ் நடித்தனர். சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் ஆ.பி.சவுத்ரி தயாரித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் சூரியவம்சம் என்ற பெயரில் உருவாகும் என்று தகவல் வெளியானது.

இது குறித்து விக்ரமன் கூறுகையில் இப்படம் தெலுங்கு, கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. விஷ்ணுவர்தன் நடிப்பில் கன்னட ரீமேக்கை நான் இயக்கினேன். ஹிந்தியில் அமிதாப்பச்சன் ஹீரோவாக நடித்த கடைசி படம் இது.

சமீபத்தில் சரத்குமாரும் ஆர்.பி.சவத்ரியும்  சூர்யவம்சம் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாராக இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இரண்டாவது பாகத்துக்கான கதை ரெடியாகவில்லை. முழு கதையும் தயாரான பிறகு பேசுகிறேன் என்று அவர்களிடம் சொன்னேன் என்றார். அப்படி உருவாக்கப்பட்டால் சரத்குமார் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏற்கனவே நடித்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

Similar News