நயன்தாரா-விக்ரம் நடித்த மெகா ஹிட் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா?

நயன்தாரா-விக்ரம் நடித்த மெகா ஹிட் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா?

Update: 2021-02-24 10:30 GMT

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம்  மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் இருமுகன். இப்படம் இந்தியில் ரீமேக் ஆக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் "இருமுகன்". இப்படத்தில் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தனர் என்பதும் விக்ரம் நாயகன் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை சிபுதமீன்ஸ் தயாரித்திருந்தார்.

எனவே இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்த முறையான அறிவிப்பு மற்றும் நடிகர், நடிகை இயக்குனர் உள்பட முக்கிய அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

 

Similar News