லோகேஷ் கனகராஜ் இயக்கம் விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67 படத்தின் தலைப்பு இதுவா இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்து வரும் நிலையில் அதுகுறித்த தகவல் ஒன்று பரவி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67 படத்தின் தலைப்பு இதுவா இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்து வரும் நிலையில் அதுகுறித்த தகவல் ஒன்று பரவி வருகிறது.
தற்பொழுது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய், வாரிசு படம் முடிந்தவுடன் அடுத்தப்படியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தற்காலிகமாக 'விஜய் 67' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு இன்னும் வெளியாகவில்லை, இருப்பினும் இந்த படத்தின் தலைப்பு 'நான் வாழும் உலகம்' என பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் பரவி வருகிறது.