கார், பைக் என பரிசுகளை வழங்கும் ஐசரி கணேஷ் - வெந்து தணிந்தது காடு வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழுவினர் உற்சாகம்

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்காக தனியாக நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.

Update: 2022-09-25 11:42 GMT

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்காக தனியாக நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.


 



இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில், சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் 'வெந்து தணிந்தது காடு' பரவலாக தமிழக முழுவதும் வெளியான திரைப்படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்திற்காக வெற்றி கொண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர் படக்குழுவினர்.


 



அதில் சிலம்பரசன் கெளதம் உள்ளிட்ட படக் குழுவினருடன் சிவகார்த்திகேயனும் அந்த வெற்றி கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார். இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றும். இயக்குனர் கௌதம் மேனனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.


 

Similar News