'தலைவர் 169' படத்தில் குட்டி ரஜினியாக சிவகார்த்திகேயன்?

ரஜினி 169 படத்தில் இளமைக்கால ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

Update: 2022-06-15 01:30 GMT

ரஜினி 169 படத்தில் இளமைக்கால ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது.





இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் 'தலைவர் 169', அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.


 




கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதும் இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் இளவயது ரஜினியாக தோன்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒரு பாடலும் எழுத உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும்.

Similar News