'இந்தியன் 2' ரெட் ஜெயண்ட் மூவிஸ் வசம் சென்றதா?

'இந்தியன் 2' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கவிருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது

Update: 2022-06-08 05:43 GMT

'இந்தியன் 2' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கவிருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.





பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட படம் 'இந்தியன் 2' கொரனோ காரணமாக படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு தொடராமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் தற்போது 'இந்தியன் 2' ஆரம்பிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.





இந்நிலையில் கமலின் சமீபத்திய படமான 'விக்ரம்' படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டது போல் 'இந்தியன் 2' படத்தை மீட்டெடுக்க உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து முடிவு எடுத்திருக்கலாம் என தெரிகிறது. அது அவ்வாறு நடக்கும் பட்சத்தில் 'இந்தியன் 2' 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' வசம் தற்பொழுது. 

Similar News