ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவது நல்லது கிடையாது.. சிட்டியில் ஓகே, கிராமத்துல எப்படி?
ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவது நல்லது கிடையாது.. சிட்டியில் ஓகே, கிராமத்துல எப்படி?;
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் நாடு முழுவதும் புதிய திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. அப்படி படத்தை பார்க்க வேண்டும் என்றால் இண்டர்நெட் வேகமாக இருக்க வேண்டும். நகரத்தில் இண்டர்நெட் வசதி வேகமாக கிடைக்கும். அதுவே கிராமத்துல இண்டர்நெட்டின் வேகம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
தமிழ் சினிமாவும் கடந்த சில மாதங்களாக முன்னணி நடிகர்களின் படமும் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டது. ஆனால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு அப்படங்கள் சென்று சேருவதில்லை. அதுவே திரையரங்கில் படம் வெளியிடப்பட்டிருந்தால் கிராமத்தில் உள்ள மக்கள் திரையரங்கில் சென்று பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், திரையரங்குகளில் படம் ஓடும் சமயத்தில் ஓடிடி தளங்களில் திரைப்படத்தினை வெளியிட மாட்டோம் என்று கடிதம் கொடுத்த பின்னர் தான் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் கருத்தில் தனக்கு உடன்பாடு உண்டு.
மேலும், கொரோனா காலத்தில் சில திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டன. இதனை தற்காலிக ஏற்பாடாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினேன். ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு பலர் சார்ந்துள்ளனர். அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். நகரத்தில் உள்ள மக்களுக்கு ஓடிடி தளங்களில் பார்க்கும் வசதி வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அந்த வசதி கிடையாது. எனவே முதலாவதாக திரையரங்கில் படங்களை வெளியிட்டு விட்டு, 2வது தவணையாக ஓடிடி தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது சிறந்தது என்றார்.