நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்ப தயங்கும் ஓ.டி.டி நிறுவனம் - ஏன்?

நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்ப ஓ.டி.டி நிறுவனம் தயங்குவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-07-16 02:18 GMT

நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்ப ஓ.டி.டி நிறுவனம் தயங்குவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.




கடந்த மாதம் 9'ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓ.டி.டி நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தனர் நயன்தாரா தம்பதியினர்.



இந்நிலையில் இந்த ஓ.டி.டி நிறுவனம் தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியை திருமணத்தை ஒளிபரப்ப தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஒப்பந்தத்தை மீறி சில புகைப்படங்களை வெளியிட்ட காரணத்தினால் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்புவது குறித்து மறுபரிசீலனை செய்வதாக ஓ.டி.டி நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

Similar News