இந்திய சினிமா வரலாற்றிலேயே உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்த முதல் படம்!

நடிகர் ஷாருக்கான் நடித்த வெளியான ஜான் திரைப்படம் 1100 கோடியை தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Update: 2023-10-08 07:15 GMT

அட்லீ இயக்கத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் கடந்த மாதம் ஏழாம் தேதி இந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே , சஞ்சய் தற்போதைய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஷாருக்கானின் மனைவி கௌரி கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் கௌரவ் வர்மாவுடன் இணைந்து தயாரித்து உள்ள இந்த படம் வெளியான நாள் முதல் வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில் ஜவான் திரைப்படம் ரூபாய் 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. ஜவான் திரைப்படம் தினம்தோறும் புதிய பாக்ஸ் ஆபிசாதனைகளை படைத்தும் பழைய சாதனைகளை முறியடித்தும் வருகிறது. இந்திய சினிமா வரலாற்றில் அதிக அளவில் அதிக வசூல் படைத்த முதல் படம் என்ற பெயரை ஜவான் படம் பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஜவான் படம் ரூபாய் 733.37 கோடி வசூலித்து இருக்கிறது. வெளிநாடுகளில் ரூபாய் 369.90 கோடி வசூலித்துள்ளது.

SOURCE :DAILY THANTHI

Similar News