'ஜெய் பாலையா' - அமெரிக்காவே அரண்டு போன பாலையா ரசிகர்களின் அட்ராசிட்டி
ஒரு நாள் முன்னதாகவே அதாவது நேற்று முன்னிலும் உலகின் பல நாடுகளில் எம்.டி.பாலகிருஷ்ணன் நடித்த வீரசிமா ரெட்டி படம் வெளியானது.
ஒரு நாள் முன்னதாகவே அதாவது நேற்று முன்னிலும் உலகின் பல நாடுகளில் எம்.டி.பாலகிருஷ்ணன் நடித்த வீரசிமா ரெட்டி படம் வெளியானது. ஆதலால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் சிறப்பு காட்சிகள் ஆங்காங்கே ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் அமெரிக்காவில் ஆந்திரா மக்கள் அதிகமாக வசிக்கும் வெர்ஜீனிய மாகாணத்தில் உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்திற்கான டிக்கெட்டுகள் பல நாட்களுக்கு முன்பாகவே விற்று தீர்ந்தது.
பல மணி நேரத்திற்கு முன் தியேட்டர் முன்பாக ரசிகர்கள் படம் வெளியான நாளில் கூடினர். பலாய்யா...பலாய்யா என படம் திரையிடத் தொடங்கியதும் கூச்சலிட்டபடி என்.டி.பாலகிருஷ்ணாவின் என்ட்ரி காட்சிகளுக்கு ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பேப்பர் துண்டுகளை திரையை நோக்கி விசியபடியும் கூச்சலிட்டப்படியும் இருந்தனர்.
இதைக் கண்ட தியேட்டர் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து படத்தை நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீசார் தியேட்டருக்கு வந்து "நீங்கள் இப்படி செய்வது எங்கள் நாட்டின் சட்ட திட்டத்திற்கு முரணானது தொடர்ந்து உங்களை படம் பார்க்க அனுமதிக்க முடியாது நீங்களாக வெளியேறுங்கள் இல்லாவிட்டால் வெளியேற்றுவோம்" என்று கூறியதை தொடர்ந்து ரசிகர்கள் அமைதியாக வெளியேறுங்கள் இது பற்றிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.