வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யா, ஞானவேல் மீது வழக்குப்பதிவு!

Update: 2022-05-18 12:12 GMT

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடையாளமாக வைத்து ஜெய்பீம் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் வக்கீலாக சூர்யா நடித்திருந்தார். அவரது பெயர் சந்துருவாக வைக்கப்பட்டிருந்தது. இப்படம் தியேட்டரில் வெளியாகாமல் அமேசான் ப்ரைமில் வெளியானது. இதனை ஒரு சிலர் பாராட்டினர்.

அதே சமயத்தில் படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்தனர். இதற்கு பா.ம.க. சார்பில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டது. இது தொடர்பாக வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு சூர்யா மற்றும் படத்தின் இயக்குனர் ஞானவேல் சில விளக்கங்களை அளித்தனர். நாங்கள் வன்னியர்களை காயப்படுத்தவில்லை என்றனர். ஆனால் வன்னியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அந்த சமுதாயத்தினர் மத்தியில் சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போர்க்கொடி எழுந்தது. ஆனால் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை.

இந்நிலையில், சென்னை, வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த புகார் மனுவில் வேள்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து வழக்கை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேளச்சேரி காவல் நிலையத்தில் இயக்குநர் மற்றும் சூர்யா மீது 295 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News