இசையமைப்பாளராக களமிறங்கும் நடிகர் ஜெய்.!

இசையமைப்பாளராக களமிறங்கும் நடிகர் ஜெய்.!

Update: 2020-11-13 17:46 GMT

வளர்ந்து வரும் நடிகரான நடிகர் ஜெய் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின் சென்னை 28, வாமனன், சுப்ரமணியபுரம், வடகறி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பின்னர்  'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற படத்தில் 2016-ஆம் ஆண்டு கடைசியாக நடித்தார். அதன்பின்  பல வருடங்கள் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் நடிப்பை தொடங்கி இருக்கிறார்.

அதன்படி 'வெண்ணிலா கபடி குழு' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த சுசீந்திரன் "ஜெய் 30" படத்தின் இயக்குனராக பணிபுரிகிறார். அறிமுகத் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.மேலும் ஜெய் படத்தில் கதாநாயகனாகவும், அவரே இசையமைப்பாளராகவும் புதிய அவதாரத்தில் களமிறங்கி இருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்த நிலையில், இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர், டீசர் ஆகியவை வெளியீட்டு தேதி விரைவில்  அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.தற்போது சுசீந்திரன் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Similar News