ஒருவழியாக முடிவான ஜெயம் ரவியின் 'அகிலன்' வெளியீடு தேதி

ஜெயம் ரவி மற்றும் திரிஷா இணைந்து நடித்த பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் ஜெயம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'அகிலன்'.

Update: 2023-01-15 08:31 GMT

ஜெயம் ரவி மற்றும் திரிஷா இணைந்து நடித்த பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் ஜெயம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'அகிலன்'. இப்படத்தின் போஸ்டட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது மற்றும் இதற்கான படப்பிடிப்பு கடந்த வருடமே முடிந்து விட்டது.




 

கடந்த வருட கிறிஸ்மஸ் விடுமுறையின் போது படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது பிப்ரவரியில் 17 அல்லது 24 ஆம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு சாம். சி. எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி கடல் கொள்ளையை கேங்ஸ்டர் ஆக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.




 

நடிகர் ஜெயம் ரவிக்கு இது 'பொன்னியின் செல்வன்' வெற்றிக்குப் பிறகு அடுத்த படமாக அகிலன் படம் வெளி வருகிறது.

Similar News