14 வருடங்களுக்கு பிறகு படத்தில் மீண்டும் இணையும் ஜோதிகா - சூர்யா.!

14 வருடங்களுக்கு பிறகு படத்தில் மீண்டும் இணையும் ஜோதிகா - சூர்யா.!

Update: 2020-11-11 16:21 GMT
தமிழ் சினிமாவில் சூர்யா-ஜோதிகா என்றாலே பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே அதிக  வரவேற்பையும், திரையில் அதிக நாட்கள் ஓடி வசூலை கொடுத்தது.கடந்த 2009-ல் வெளியான "பூவெல்லாம் கேடடுப்பார்" என்ற படத்தின் மூலம் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர். 

அதனையடுத்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து, கடைசியாக சில்லனு ஒரு காதல் படத்தில் 2006-ல் நடித்தனர்.பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை நோக்கும் பொறுப்பை ஏற்றார் ஜோதிகா.கடந்த 2016-ஆம் ஆண்டு "36 வயதினிலே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் மட்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜோடியை மீண்டும் திரையில் ஒன்றாக காண ரசிகர்கள் இன்றும் ஆசைப்படுகின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் 14 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சூர்யா சமீபத்தில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தினை 'ஹலீதா ஷமீம்' இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இவர் சில்லுக்கருப்பட்டி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா-ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை மலையாள இயக்குநரான அஞ்சலி மேனன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் இந்த படத்தினை பற்றிய முழு அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.


 

Similar News