கலைமாமணி விருது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.!

கலைமாமணி விருது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.!

Update: 2021-02-20 09:07 GMT

2019 - 20ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இதில் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது, நடிகை சரோஜாதேவி, பாடகி பி.சுசிலா உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதேபோன்று 2020ம் ஆண்டுக்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மற்றும் பாடகி ஜமுனாராணி, நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

இதே போன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , நடிகர் யோகிபாபு இசையமைப்பாளர் தீனா, பின்னணி பாடகி சுஜாதா ஆகியோர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. மேலும், இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமாத்துறை, கிராமிய கலை உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

Similar News