தொலைக்காட்சி செய்தியாளரை தள்ளிவிட்ட நடிகர் கமல்ஹாசன்: கோவை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு சென்ற கமல்ஹாசன் அங்கிருந்த தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை தள்ளிவிட்டுள்ளார்.

Update: 2021-04-07 12:52 GMT

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை சோதனை செய்ய வந்த போது, நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு கமல்ஹாசன் பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.


 



அப்போது காலை கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு சென்ற கமல்ஹாசன் அங்கிருந்த தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை தள்ளிவிட்டுள்ளார். இதற்கு கோவை பத்திரிகையாளர் சங்கம் கண்டனத்தை பதிவிட்டுள்ளது.

இது பற்றி கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த கேமராமேன் மோகனை படம் எடுக்க கூடாது எனக்கூறி தனது கையில் இருந்த கைத்தடியால் கமல் தள்ளியுள்ளார். இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கண்டனம் எழுந்துள்ளது. செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

Similar News