கமலஹாசன்: கால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்ட முதல் பதிவு.!

கமலஹாசன்: கால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளியிட்ட முதல் பதிவு.!

Update: 2021-01-23 17:56 GMT

தமிழ் சினிமாவில் மக்களால் உலக நாயகன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கமலஹாசன். இவர் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று முடித்ததோடு அவரது  காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அறுவை சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஒரு மணி நேரங்களில் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் மலையாள திரைப்படம் ஒன்றின் டீசரை வெளியிட்டு உள்ளார். "ஆர்க்கரியம்" டீசரை வெளியிட்ட கமலஹாசன் கூறியது: இப்படத்தை பல  திறமையான நடிகர்கள், நடிகைகள் நடித்து உள்ளோம் என்றும் ஆர்க்கரியம் என்ற படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் சானு ஜான் வர்கீஸ் என்பவர் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களாக பார்வதி,பிஜூமேனன்  என பல நபர்கள் நடித்து உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதைப் பார்த்த மலையாள ரசிகர்கள் டீசரை ஷேர் செய்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News