கமலஹாசன் கூறிய வார்த்தை: இன்று எவிக்சன் ஒருவரா.? இருவரா.?

கமலஹாசன் கூறிய வார்த்தை: இன்று எவிக்சன் ஒருவரா.? இருவரா.?;

Update: 2020-12-20 14:22 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒருவர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று வீட்டில் உள்ள ஒருவர் வெளியேற உள்ளார். நேற்று ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் சேவ் செய்யப்பட்ட நிலையில் இன்று ஆஜித், அனிதா, அர்ச்சனா, ஷிவானி மற்றும் சோம் ஆகிய ஐந்து பேர்களில் ஷிவானி சேவ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆஜித், அர்ச்சனா, அனிதா, மற்றும் சோம் ஆகிய நான்கு பேர்களில் ஒருவர் யார் வெளியேறுகிறார் என்பதை கமல்ஹாசன் அறிவிக்கும் முன் இந்த நான்கு பேரில் யார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கமலஹாசன் கேட்ட போது சோம் என்று பாலாஜியும் ஆஜித் என்றும் ஆரியும் கூறுகின்றனர்.

இதனையடுத்து ஆஜித் டென்ஷனாக இருப்பதை பார்த்த கமல், ஆஜித் சீட் நுனியில் உட்கார்ந்திருக்கிறார் என்று கூறிவிட்டு மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறி நாமினேஷன் அட்டையே எடுக்கிறார். மேலும் இதில் ஒருவர் இருக்கிறாரா அல்லது இருவர் இருக்கின்றாரா பார்ப்போம் என்று அவர் கூறும்போது நாமினேஷன் செய்யப்பட்ட நான்கு பேரும் மிக அதிர்ச்சியிலும், யார் வெளியேற்ற பட இருக்கின்றனர் என்ற பயத்திலும் உள்ளனர்.இதுபற்றிய முழுமையான தகவலும் இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.


 

null


 

Similar News