கமல் தயாரிப்பில் உதயநிதி கதாநாயகனாகிறார்

உதயநிதி அடுத்தபடியாக இயக்குனர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-27 11:11 GMT

உதயநிதி அடுத்தபடியாக இயக்குனர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' என்ற படத்தில் நடிக்கிறார் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார்.




 

இப்படத்தை முடித்துவிட்டு அடுத்தபடியாக உடனே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதன் அறிவிப்பை சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமலஹாசன் வெளியிட்டார். இதுகுறித்து 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் வாய்ப்பு எனக்கு வழங்கியதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல் சாருக்கு நன்றி' என உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

Similar News