ரம்யா வாயை அடைத்த கமல் - நிமிர்த்துவேன் என்று எச்சரிக்கை.!

ரம்யா வாயை அடைத்த கமல் - நிமிர்த்துவேன் என்று எச்சரிக்கை.!

Update: 2020-12-19 19:51 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக  சென்று கொண்டிருக்கும் வகையில் இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை மென்மையாக நடந்து கொண்ட கமல்ஹாசனும் தற்போது கொஞ்சம் கடுமையாக நடந்து வருகிறார்.

இந்த வாரம் இதுவரை பாராட்டுக்களை மட்டுமே பெற்று வந்த ரம்யாவின் வாயை அடைக்கினார். மேலும் சட்டத்தை வளைத்தால் நிமித்துவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று கோழிப்பண்ணை டாஸ்க் குறித்த விவாதம் நடந்த போது விதிமுறைகள் விஷயத்தில் உங்களுக்கு நிறைய குழப்பம் ஏன் என ஆரியிடம் கமல்ஹாசன் கேள்வி கேட்டார். அப்போது ஆரி, நரிகளுக்குள் நான்கு பேர் டீம் ஃபார்ம் பண்ணிட்டாங்க, அப்ப நாயும் போய் அந்த டீமிடம் பேசினேன் என்று கூறியபோது குறிக்கிட்ட ரம்யா, அந்த டீமில் அவரும் ஒருத்தார் என்று கூறினார்.

அப்போது ஆரி, நான் சொல்லி முடிக்கும் வரை தயவு செய்து பொறுமையாக இருங்கள் என ஆரி கூறியபோது இது ஒரு இன்பர்மேஷன் என்று ரம்யா பதிலளித்தார். அப்போது கமல் இன்ஃபார்மெண்ட் ரம்யா என்று அவரை கேலியாக அழைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோபம் இருக்கத்தான் செய்யும் என்று கூறி அவர் வாயை அடைத்த போது ரம்யாவின் முகம் சுருங்கியது.

அதேபோல் அர்ச்சனாவும் விளையாட்டின் விதிகள் குழப்பமாக இருந்தது என்று சமாளித்தபோது சட்டம் இங்கேயும் சரி, அங்கேயும் சரி தனிநபருக்காக வளைக்க முடியாது. அப்படி வளைத்தால் நிமிர்த்தி விடுவேன், நான் கேட்பேன் என்று கமல் எச்சரிக்கையுடன் கூறியது அர்ச்சனாவுக்கும் மட்டுமல்ல, வெளியே சட்டத்தை வளைப்பவர்களுக்கும் என புரிந்துகொள்ள முடிகிறது.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் பாதிக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும், விதிகளை மீறிய போட்டியாளர்களை வறுத்தெடுக்கவும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

null


 

Similar News