'தயாராக இருங்கள் ராண்டி' - ஒளிப்பதிவாளருக்கு கமலின் செய்தி ஏன்?

இந்தியன்-2 என்ன ஆனது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தியன்2 தயாராக இருங்கள் என ஒளிப்பதிவாளருக்கு கமல் கூறியுள்ளார்.

Update: 2022-06-06 01:45 GMT

இந்தியன்-2 என்ன ஆனது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தியன்2 தயாராக இருங்கள் என ஒளிப்பதிவாளருக்கு கமல் கூறியுள்ளார்.




தற்பொழுது கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் 'விக்ரம்' ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இந்தப் படத்தை பார்த்துவிட்டு, 'கமல் சார் புதிய அவதாரத்தில் சூப்பராக நடித்துள்ளார்' என பாராட்டியுள்ளார்.




அதுக்கு பதில் தரும் விதமாக கமல் கூறியதாவது, 'நீங்களும் தயாராக இருங்கள் திட்டமிட்டபடி நாம் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்' என கூறியுள்ளார். இதனால் 'இந்தியன் 2' திரைப்படம் துவங்கும் என தெரிகிறது. 

Similar News