பிக்பாஸில் கமல் செய்த செயல்! குவியும் பாராட்டு மழை!
பிக்பாஸில் கமல் செய்த செயல்! குவியும் பாராட்டு மழை!
பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றியாளர் ஆரி என்பது அறிவிக்கப்பட்டது.மேலும் இப்போட்டியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் மீதும் மக்கள் அளவு கடந்த மரியாதையை பொழிந்து வருகின்றனர்.
காரணம் அவருடைய நாசூக்கான பேச்சு, அதிகாரம் செலுத்தாத இயல்பு என அவர் ஒரு நவீன மனிதருக்கான அடையாளத்துடன் காட்சி அளிக்கிறார். மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் ஒருபோதும் நாட்டாமையாக செயல்படாமல் தேர்ந்த ஒரு மனிதராகவே நடந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர் பிக்பாஸ் 3 ஆவது சீசனில் மறைமுகமாக அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். ஆனால் தற்போது நடந்து முடிந்த சீசனில் வெளிப்படையாகவே பல இடங்களில் அரசியல் கருத்துகளை அள்ளித் தெளித்து இருந்தார். இதையும் தாண்டி அவர் பிக்பாஸ் 4-ஆவது சீசனில் ஒவ்வொரு நிகழ்ச்சி தொகுப்பின்போதும் ஒரு புத்தகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இது ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் அறிமுகப்படுத்திய பெரும்பாலான புத்தகங்கள் தற்போது விற்பனையில் சூடு பிடித்து இருக்கிறது.
இதனால் மறுபதிப்புக்கு பரிந்துரையும் செய்யப்பட்டு இருக்கிறது. அவர் கடைசியாக அறிமுகம் செய்து வைத்த எழுத்தாளர் செல்வேந்திரனின் 'வாசிப்பது எப்படி' எனும் புத்தகம் அவர் அறிமுகம் செய்து வைத்த 2 மணி நேரத்தில் இணையதளம் வாயிலாகவும் பதிப்பகத்தின் வாயிலாகவும் கிட்டத்தட்ட 500 பிரதிகள் விற்று இருக்கின்றன. இதனால் புத்தகம் மறுபதிப்புக்கு சென்று இருப்பதாக அப்புத்தகத்தின் பதிப்பகத்தார் டிவிட்டரில் தெரிவித்து உள்ளனர். மேலும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் புத்தக வாசிப்பை குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு அவர்கள் நன்றியும் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.