'தலைவி' படம் எப்போது வெளியிடப்படும்? பாலிவுட் நடிகை கங்கனா விளக்கம்.!
தமிழ் நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியிடுவதற்கு தயாராக உள்ளது.;
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவி'. இந்த படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆர்., வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.
மேலும், தமிழ் நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியிடுவதற்கு தயாராக உள்ளது.
இதனிடையே படம் வெளியிடப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகை கங்கனா அது பற்றி விளக்கம் அளித்துள்ளதாவது: தலைவி படத்தின் வெளியிடும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னரே தலைவி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.