பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி.!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-08 06:40 GMT

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கொரோனா தொற்று வாட்டி வதைத்து வருகிறது. வடமாநிலங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகவே உள்ளது. இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கும் நிலையே உருவாகியுள்ளது.




 


இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பாதுகாப்பாக இருக்கவும், வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News