4 மொழிகளில் கலக்கிய பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்.!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி 76, உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

Update: 2021-07-26 05:34 GMT

பழம்பெரும் நடிகை ஜெயந்தி 76, உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

நடிகை ஜெயந்தி சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மிஸ் லிலாவதி என்ற கன்னட படத்தில் சிறுவயதிலேயே நடித்து தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News