ரஜினி படத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறாரா? அவரே கூறிய விளக்கம் என்ன?
ரஜினி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் கன்னட நடிகர் சிவராஜ்குமார்.
ரஜினி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் கன்னட நடிகர் சிவராஜ்குமார்.
கன்னடத்தில் பிரபல நடிகர் சிவராஜ்குமார் ரஜினியின் அடுத்த படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகின இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகாத நிலையில் தற்போது இதுபற்றி கூறியுள்ளார் சிவராஜ் குமார்.
இதுகுறித்து சிவராஜ் குமார் கூறியதாவது, 'ரஜினியை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய விருப்பம், அது அவரது 169 படத்தில் நடித்து சாத்தியமாகி இருக்கிறது' எனக் கூறி உள்ளார். படப்பிடிப்பு ஆகஸ்டில் ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.